Milk Producers


பசுந்தீவன புல் (CO4) விற்பனை

பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றியத்திலிருந்து வேண்டுகோள் / தேவைக்கேற்ப பசுந்தாழ் தீவனம் (CO4 புல் ரகம்) தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வொன்றியத்தில் தற்போது சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் தீவனப்புல் (CO4 புல் ரகம்) தரமாக வளர்க்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாகவும், சங்கம் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விலை ஒரு கிலோ ரூ.2.50/- (இரண்டு ரூபாய் ஐம்பது பைசா) மட்டுமே. பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றிய வாகனங்கள் மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்பட்டுவருகிறது.

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களுக்கு புல் கரணைகளும் வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி தேவையான அளவுக்கு தீவனப்புல் மற்றும் புல்கரணைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் எத்தகைய சூழ்நிலையிலும் தேவைகளை சமாளிக்க இவ்வொன்றியத்திற்கு சொந்தமான புதுக்குடி கிராமத்தில் உள்ள இடத்தில் தீவன புல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தால் 20 ஏக்கரில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. மேலும் புதுக்குடியில் தற்போது சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனப்புல் வளர்க்க நிலம் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தீவனப்புல் வளர்க்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் மாடுகள் வளர்க்கும் பொது மக்களுக்கும் 1 கிலோ ரூ.3.50/- என்ற குறைத்த விலையில் தீவனப்புல் வழங்கப்படுகிறது.

எனவே பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கோடை காலத்திலும் எவ்வித தட்டுப்பாடுமின்றி தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிரோம்.